பஞ்சாப்பில் நடந்த வங்கிக் கொள்ளைதான் அஜித்தின் துணிவு படத்தின் கதையா?

Ajith Kumar Thunivu
By Irumporai Sep 22, 2022 06:13 AM GMT
Report

வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டதுதான் அஜித்தின் துணிவு படத்தின் கதை என்று சினிமா  வட்டாரத்தில் பேசப்படுகிறது.

துணிவு

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச் வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் முதல் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது.

துணிவு எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில் துப்பாக்கியுடன் அஜீத் ஸ்டைலாக அமர்ந்திரிக்கும் புகைப்படமும் No Guts No Glory என்ற வாசகமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப்பில்  நடந்த வங்கிக் கொள்ளைதான் அஜித்தின் துணிவு படத்தின் கதையா? | Bank Robbery Story Ajiths Thunivu

இந்த நிலையில் அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் பஞ்சாப்பில் நடந்த வங்கி கொள்ளையினை அடிப்படையாக கொண்ட படம் என தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் வங்கி கொள்ளை

1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த மிகப்பெரிய நிஜ வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை ஹெச் வினோத் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. 12 முதல் 15 கொள்ளையர்கள் காவல்துறை உடையணிந்து துப்பாக்கி முனையில் சுமார் 4.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதாவது இந்திய மதிப்பில் 36 கோடிக்கும் மேல் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் பொதுமக்கள், வங்கி ஊழியர்கள், மற்றும் காவல் துறையினர் என யாருக்கும் சிறிய காயம் கூட ஏற்படாமல் இக்கொள்ளையை மிகவும் கச்சிதமாக நடத்து முடித்து மொத்த பணத்துடன் தப்பினர்.

வங்கி கொள்ளை கதை

பஞ்சாப்பில்  நடந்த வங்கிக் கொள்ளைதான் அஜித்தின் துணிவு படத்தின் கதையா? | Bank Robbery Story Ajiths Thunivu

இந்த கொள்ளைச் சம்பவம் பற்றி காவல்துறை தரப்பில் கூறுகையில் இது ஒரு நேர்த்தியான கொள்ளை என விவரித்துள்ளது. இதுவரை நடந்த வங்கிக் கொள்ளைகளிலே இந்த கொள்ளை சம்பவமே இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வங்கிக் கொள்ளையாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே எச். வினோத் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான தீரன் அதிகாரம் ஒன்று படமும் உன்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.