பல பெண்களுடன் தொடர்பு? தட்டிக்கேட்ட மனைவி - புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!
வங்கி ஊழியர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம்
பெங்களூரு, கிரிநகரை சேர்ந்தவர் ககன் ராவ்(31). வங்கி ஊழியரான இவருக்கும், சாம்ராஜ்நகரின் மேகனா, 28, என்பவருக்கும் திருமணம் நடந்தது. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

மனமுடைந்த ககன் வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அவரது தந்தை போலீஸில், 'மேகனாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை தட்டிக் கேட்டார். ககனை, மேகனாவும், அவரது குடும்பத்தினரும் தாக்க முயன்றனர்.
கணவன் தற்கொலை
மனரீதியாக தினமும் ககனுக்கு, மேகனா தொல்லை கொடுத்தார். என் மகன் தற்கொலைக்கு அவரது மனைவி தான் காரணம்' என புகாரளித்துள்ளார். ஆனால் இதனை மறுத்துள்ள மேகனா,

'ககனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது, திருமணம் முடிந்த இரண்டு நாட்களிலேயே தெரிய வந்தது. அந்த பெண்ணுடனான பழக்கத்தை கைவிடும்படி, பல முறை கூறினேன்.
அவரோ கேட்கவில்லை. அந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில், அவர் தற்கொலை செய்து இருக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.