ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கி ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் நடுத்தெரு பகுதியில் வசித்து வந்தவர் தர்மராஜ் .53 வயதான இவர் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு சொசைட்டி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வந்துள்ளார்
.கடந்த இரண்டு தினங்களாக தர்மராஜாவை காணவில்லை என உறவினர்கள் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்
. இந்நிலையில் இன்று மாவூத்து மலையடிவார பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தர்மராஜ் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலையா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.