இனி வீட்டிலிருந்தே முகத்தை போனில் ஸ்கேன் செய்து 5 நிமிடத்தில் வங்கி கணக்கு தொடங்கலாம்!!

open by bank account face scan
By Anupriyamkumaresan Aug 04, 2021 10:48 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விஞ்ஞானம்
Report

அபுதாபியில் ஒரு வங்கி, அமீரக உள்துறை அமைச்சகத்தின் முக அடையாளத்தை சரி பார்க்கும் வசதியை, டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி பொது மக்கள் தங்களின் வங்கி கணக்கை தொடங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இனி வீட்டிலிருந்தே முகத்தை போனில் ஸ்கேன் செய்து 5 நிமிடத்தில் வங்கி கணக்கு தொடங்கலாம்!! | Bank Account Open By Facial Scan In Abudhabi

மேலும் அபுதாபியில் தான் இந்த சேவையை முதன் முதலாக செய்யவும் ஆரம்பித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம் என்றும், வங்கிக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடியோ அல்லது அலுவலகத்தில் இருந்தபடியோ கூட ஒவ்வொருவரும் தன் புது வங்கிக் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இத்தகைய வசதியை செய்யும் முதல் வங்கி என்ற பெருமையை அபுதாபி இஸ்லாமிய வங்கியே பெற்றுள்ளது.

மேலும் இந்த வசதிகளின் மூலம் புதிதாக வங்கி கணக்கை தொடங்கும் நபர்களின் பாஸ்போர்ட், அமீரக அடையாள அட்டை உள்ளிட்டவற்றைச் சரிபார்க்கப்படுவதுடன் அவரது முக அடையாளமும் உறுதி செய்து கொள்ளப்படுகிறது.

இனி வீட்டிலிருந்தே முகத்தை போனில் ஸ்கேன் செய்து 5 நிமிடத்தில் வங்கி கணக்கு தொடங்கலாம்!! | Bank Account Open By Facial Scan In Abudhabi

இந்த நடைமுறையின் மூலம் 5 நிமிடத்திற்கு உள்ளாகவே புது வங்கிக் கணக்கை ஒருவர் தொடங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கு பொதுமக்கள் தங்களது இந்த வங்கியின் செயலியை தங்களது செல்போன் அல்லது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டாலே போதும் என்றும் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.