ரேசன் கார்டு வைத்திருப்பது முக்கியமில்லை - கட்டாயம் இதையும் செய்திருக்க வேண்டும் அது என்ன தெரியுமா?
தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 ஆயிரம் வழங்க உள்ள நிலையில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதை செய்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000
அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்காண பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அப்போது அந்த பட்ஜெட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிவிப்புக்கு ஏராளமான பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வங்கி கணக்கு கட்டாயம்
ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தகுதியான குடும்ப தலைவிகளை கணக்கெடுக்கும் பணியை அரசு செய்து வருகிறது.

மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனவே ரேசன் கார்டு வைத்துள்ள குடும்ப தலைவிகள் வங்கி கணக்கு (பேங்க் அக்கவுண்ட்) இல்லை என்றால் உடனே அதை தொடங்கினால் நீங்கள் ரூ.1000 பெற எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan