சோதனை மேல் சோதனை : ரோஹித் முயற்சி வீணானது ..பங்களாதேஷ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Irumporai
in கிரிக்கெட்Report this article
இந்தியாவிற்கெதிரான இரண்டாவது ஓருநாள் போட்டியில் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்று கைப்பற்றியுள்ளது.
இந்தியா vs வங்கதேசம்
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டாக்காவில் இன்று நடைபெறும் 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 7விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.
இதன் பின் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் ஆட்டத்தை தொடங்கியது.முதல் 10 ஓவர்களில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது கோலி 5, தவான் 8, சுந்தர் 11 ரன்களில் அவுட் ஆகினர்.
இந்தியஅணி வெற்றி
ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தால் சற்றே தொய்விலிருந்து இந்திய அணி மீண்டது அவர் பங்கிற்கு 82 எடுத்தும் அக்சர் படேல் (56) எடுத்து ஆட்டமிழந்தனர்.ரோஹித் சர்மா கையில் காயத்துடன் கடைசி பந்து வரை ஆட்டமிழக்காமல் இருந்து போராடியும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
9 விக்கெட்களை இழந்த இந்திய அணி கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில் 1 ரன்னை மட்டும் எடுக்க முடிந்தது.பங்களாதேஷ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
கடைசி ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது