இந்திய காதலனை சந்திக்க 3 குழந்தைகளுடன் கடல் கடந்து வந்த பெண் - ஷாக் கொடுத்த கிராமத்தினர்!

India Bangladesh Marriage
By Jiyath Oct 02, 2023 09:44 AM GMT
Report

இந்திய காதலனை சந்திக்க வங்காளதேசத்தில் இருந்து 3 குழந்தைகளுடன் வந்த பெண்ணிற்கு கிராமத்தினர் அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளனர். 

ஆன்லைன் காதல்

உத்திரபிரதேச மாநிலம் ஷரவஸ்தி மாவட்டத்தில் உள்ள பர்தா ரோஷன்கர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் கரீம் (27). இவர் சமையல் கலைஞராக பக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்திய காதலனை சந்திக்க 3 குழந்தைகளுடன் கடல் கடந்து வந்த பெண் - ஷாக் கொடுத்த கிராமத்தினர்! | Bangladesh Woman Flew To India With Her 3 Children

அப்துல் கரீமுக்கு வங்காளதேச நாட்டை சேர்ந்த 32 வயதாகும் தில்ருபா ஷர்மி என்ற பெண்ணுடன் ஆன்லைன் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் சாட்டிங்காக மாறியுள்ளது. தில்ருபா ஏற்கனவே திருமணமாகி, அவரின் கணவர் கொரோனா சமயத்தில் இறந்துவிட்டார்.

இவருக்கு 15,12, மற்றும் 7 வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரின் நட்பும் காதலாக மாறி, இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி தில்ருபா தனது 3 குழந்தைகளுடன் சுற்றுலா விசாவில் உத்தரபிரதேசத தலைநகர் லக்னோவுக்கு வந்தித்துள்ளார்.

அதிர்ச்சி செய்தி

அப்துல் கரீமும் அதே நாளில் பக்ரைனிலிருந்து லக்னோ வந்துள்ளார். பின்னர் அவர்கள் 5 பேரும் ஒரு ஹோட்டலில் 2 நாட்கள் தங்கியுள்ளனர். இதனையடுத்து தில்ருபா மற்றும் அவரது குழந்தைகளை அப்துல் கரீம் தனது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.

இந்திய காதலனை சந்திக்க 3 குழந்தைகளுடன் கடல் கடந்து வந்த பெண் - ஷாக் கொடுத்த கிராமத்தினர்! | Bangladesh Woman Flew To India With Her 3 Children

அப்போது தில்ருபாவுக்கு அதிர்ச்சியான செய்தியை கிராமத்தினர் தெரிவித்தனர். அப்துல் கரீமுக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை கிராமத்தினர் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு தில்ருபா அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் அப்துல் கரீமின் மனைவி மற்றும் கிராமத்தினர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இதுகுறித்து காவல் துறையில் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தில்ருபா ஷர்மி தனது நாட்டுக்கே திரும்பிச் செல்வதாக தெரிவித்து வங்காளதேசத்திற்கு திரும்பிச் சென்றார்.