கண்டதும் சுட உத்தரவு; எரியும் வங்கதேசம் - ஒலிக்கும் மரணஓலம்!

Curfew Bangladesh
By Sumathi Jul 21, 2024 06:32 AM GMT
Report

ஊரடங்கைத் தாண்டி வெளியே வருவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எரியும் வங்கதேசம்

வங்காளதேசம், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

bangladesh

இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் 30 சதவீத இடஒதுக்கிட்டை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், 30 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று கூறி உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

வெடிக்கும் வன்முறை; இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் - தூதரகம் வேண்டுகோள்

வெடிக்கும் வன்முறை; இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் - தூதரகம் வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவு

இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளன. தொடரும் வன்முறையில் இதுவரை குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறைப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறி வருகிறது. மேலும், ராணுவமும் கூட களமிறக்கப்பட்டுள்ளது.

கண்டதும் சுட உத்தரவு; எரியும் வங்கதேசம் - ஒலிக்கும் மரணஓலம்! | Bangladesh Protests Cops Granted Shoot Sight Order

இதனையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை வங்கதேச அரசு அறிவித்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அனைத்து கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வெளியே வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கு இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, வன்முறை போராட்டங்கள் தொடரும் நிலையில், சுமார் 1,000 இந்திய மாணவர்கள் வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.