ஈத் பலியிலிருந்து தப்பித்த வைரல் டொனால்ட் டிரம்ப்' எருமை!
டொனால்ட் டிரம்ப்பை ஒத்திருப்பதால் இணையத்தில் வைரலான ஒரு எருமை, ஈத் பலியிடுதலில் இருந்து மீட்கப்பட்டு பங்களாதேஷின் தேசிய விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் தோற்றத்தை ஒத்த எருமை
ஏறக்குறைய 700 கிலோ எடை கொண்ட அந்த எருமை, அதன் தனித்துவமான வெள்ளை நெற்றிப் பகுதி மற்றும் சீவப்பட்ட முடி அமைப்பால் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

ஈத் அல்-அதா பண்டிகையை முன்னிட்டு வெளியான அதன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வைரலாக பரவிய நிலையில், பார்வையாளர்கள் அதற்கு “டொனால்ட் டிரம்ப் எருமை” என்று பெயரிட்டனர்.
மேலும், அதன் காணொளிகள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றன. இதனையடுத்து, நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ‘அல்பினோ’ வகையைச் சேர்ந்த அந்த எருமை, ஈத் பண்டிகைக்காக விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் போன்ற முகத்தோற்றம் கொண்டதாகக் கூறப்பட்ட அந்த எருமை மீட்கப்பட்டு தேசிய உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த விலங்கை பாதுகாப்பாக பராமரிப்பதற்கும், பொதுமக்கள் அதை பாதுகாப்பான சூழலில் பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
#Watch | People gather to see the viral albino buffalo with blond locks, nicknamed 'Donald Trump,' before it is sacrificed as part of the Eid al-Adha festival's 'Qurbani' ritual. pic.twitter.com/jrzX8go4LJ
— NDTV (@ndtv) May 26, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |