பங்களாதேஷில் கோர விபத்து : சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ, 49 பேர் உடல் கருகி உயிரிழப்பு!
பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுக நகருக்கு அருகே உள்ள சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ மற்றும் வெடி விபத்து ஏற்பட்டதில் 49 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பங்களாதேஷ்
பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில், சிட்டகாங் என்ற துறைமுக நகரம் உள்ளது. இந்த நகருக்கு அருகே அமைந்துள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குறிப்பாக சிட்டகாங் நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிதாகுந்தாவில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்து ஏற்பட்ட வெடி விபத்துகளுக்கு வழி வகுத்துள்ளது.
இதனை தொடர்ந்து கொழுந்துவிட்டு எறிய தொடங்கிய தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைகப்பட்டனர்.
49 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 49 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 49 பேரில் 6 பேர் தீயணைப்பு வீரர்கள் ஆவர். தீயணைப்பு பணியில் ஈடுப்பட்ட மேலும் 21 வீரர்கள் படுகாயங்களுடன் சிகிசையில் உள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.