வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி...! - குவியும் வாழ்த்துக்கள்
நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா இணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வந்தது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி நடந்தது. இதில், முதலில் ஆடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை தொடந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது. 2 ரன்கள் எடுத்திருந்த கே.எல். ராகுல், ஷகீப் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட்டானார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி
3-ம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இன்று களமிறங்கியது.
இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.
ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியால், உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி முன்னிலையில் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் இந்த வெற்றியை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில், இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.