ஜிம்பாப்வே அணியை ஊதித் தள்ளிய வங்கதேசம்...!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் ஜிம்பாப்வே அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேச அணி வென்று தொடரை கைப்பற்றும் நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்து அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் சகப்வே 84 ரன்கள் விளாச 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 298 ரன்கள் குவித்தது.

299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. சிறப்பாக விளையாடிய அந்த அணியின் தமிம் இக்பால் (112 ரன்கள்) சதமடித்தார். இதன்மூலம் 48 ஓவர்களில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan