அசத்திய ஷகிப் அல் ஹசன்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் வெஸ்லி மாதவ்ரே 56 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 241 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 96 ரன்கள் விளாச 49.1 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி 2-1 க்கு என்ற கணக்கில் கைப்பற்றியது.