Thursday, May 29, 2025

‘வேர்ல்ட் கப் எடுத்து வைங்க’ - சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்து மாஸ் காட்டிய வங்கதேசம்..

t20worldcup BANvPNG
By Petchi Avudaiappan 4 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

டி20 உலகக்கோப்பை பிரிவு பி தகுதிச் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்று சூப்பர்-12 சுற்றுக்கு வங்கதேசம் அணி தகுதி பெற்றுள்ளது. 

டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் பபுவா நியுகினியா அணிகள் மோதின. 

டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணியில் கேப்டன் மஹ்முதுல்லா 50 ,ஷாகிப் அல் ஹசன் 46 , லித்தன் தாஸ் 29 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.  

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாப்புவா நியூ கினியா அணி டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. ஷகிப் அல்சனின் சுழலில் சிக்கி அந்த அணி சிட்டுக்கட்டாக சரிந்தது. முதல் 7 பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை.

இதனால் 29 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து மிக மோசமான நிலையில் பாப்புவா நியூ கினியா இருந்தது. பின்னர் வந்த கிப்லின் டோரிகா மட்டும் 46 ரன்கள் எடுக்க அந்த அணி 97 ரன்களுக்குள் ஆல்-அவுட்டானது. இதனால் வங்கதேசம் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் அணி அதிகாரப்பூர்வமாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. அதேசமயம் ஏற்கனவே ஸ்காட்லாந்து அணியும் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. தனது 3வது போட்டியில் ஓமனை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் முடிவை பொறுத்தே வங்கதேசம் குரூப் ஏ பிரிவுக்கு செல்லுமா அல்லது குரூப் பி பிரிவில் இடம்பிடிக்குமா என்பது தெரியவரும்.