“என்னடா... இப்படி பொசுக்குன்னு ஜெயிச்சிட்டிங்க”- ஆஸி.க்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்

1st t20 match AUSvsBAN Australia cricket team
By Petchi Avudaiappan Aug 03, 2021 05:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி ஷகிப்-அல்-ஹசன் 36 ரன்களும், முகம்மது நைம் 30 ரன்களும் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் அதிகப்பட்சமாக ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

“என்னடா... இப்படி பொசுக்குன்னு ஜெயிச்சிட்டிங்க”- ஆஸி.க்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம் | Bangladesh Beat Australia By 23 Runs In 1St T20

பின்னர் 132 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமி்றங்கிய ஆஸி., அணியில் மிட்செல் மார்ஷ் மட்டும் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க தவறினர். இதனால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், வங்கதேச அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி தரப்பில் அதிகப்பட்சமாக நசும் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.