சாக்லேட் வாங்க எல்லை தாண்டிய வங்கதேச சிறுவன் - கடைசியில் நடந்தது என்ன?
சாக்லேட் வாங்குவதற்காக இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக சிறுவன் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - வங்கதேச நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையைக் குறிக்கும் ஷால்டா நதிக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் எமன் ஹொசைன் என்ற சிறுவன் வசித்து வருகிறான். இச்சிறுவன் இந்தியாவில் திரிபுராவின் சிபாஹிஜாலா மாவட்டத்தின் கலம்சௌரா கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் இந்திய சாக்லேட் ஒன்றை வாங்குவதற்காக ஷால்டா நதியை கடந்து வந்துள்ளான்.
வழக்கமாக எல்லைப்பகுதியில் முள்வேலியில் உள்ள துளை வழியாக பதுங்கிச் சென்று அதே வழியில் வீடு திரும்புவதை கொண்டிருந்த எமன் ஹொசைன் அந்த சிறுவன் இந்தமுறை பாதுகாப்பு படை வீரர்களிடம் பிடிபட்டுள்ளான்.
அவனிடம் நடைபெற்ற விசாரணையில் ஹொசைனிடம் நூறு வங்காளதேச ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது. மேலும் சிறுவன் காணவில்லை என வங்கதேசத்தில் இருந்து எந்த புகாரும் தரப்படவில்லை. பின்னர் சட்டவிரோதமாக நுழைந்த அச்சிறுவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் உள்ளூர் போலீஸாரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். அங்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் ஹொசைன் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan