சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம் ; உள்ளே இருந்த 20 பேரின் நிலை? பதற வைக்கும் வீடியோ

Karnataka Bengaluru Death
By Karthikraja Oct 22, 2024 03:30 PM GMT
Report

 கனமழையால் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

பெங்களூரு மழை

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

bengaluru building collapse

இந்நிலையில் இன்று(22.10.2024) மதியம் 4 மணியளவில், பெங்களூரு, பாபுசாபாலி என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.

சரிந்த கட்டிடம்

கட்டடம் இடிந்து விழுந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்து வந்துள்ளனர். கட்டிடத்தினுள் 20 பேர் இருந்த நிலையில், 14 பேர் மீட்கப்பட்டுள்ளார். ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கன மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது கட்டிடத்தின் உள்ளே உள்ள 5 பேரின் நிலை குறித்து தெரியாவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.