பெங்களூர் அணியை பந்தாடி வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி - 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Punjab Kings Royal Challengers Bangalore IPL 2022
3 நாட்கள் முன்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

15வது ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி மும்பையில் நடைபெற்றது.இதில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

பெங்களூர் அணியை பந்தாடி  வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி - 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்ட்ன் 70 ரன்களும்,பாரிஸ்டோ 66 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் அணி சார்பில் ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது பெங்களூர் அணி. முக்கிய வீரர்களான டூபிளசிஸ் 10 ரன்களிலும் விராட் கோலி 20 ரன்களிலும் ஆவுட்டாகினர்.

பெங்களூர் அணியை பந்தாடி  வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி - 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

இதையடுத்து வந்த மேக்ஸ்வெல் 35 ரன்களும் மற்றும் படித்தர் 26 ரன்களும் எடுத்த நிலையில் அவுட்டாகினர். இதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பெங்களூர் அணி 54 வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளையும்,ரிஷி தவான் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.