பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கு... வாய்ப்பில்லை நேர்ல ஆஜராகுங்க – ஓபிஎஸ், ஈ.பி.எஸ் க்கு நீதிமன்றம் உத்தரவு !
தன்னை நீக்கியது தொடர்பாக பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
. அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூர் புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வது, தேர்தல் தோல்விக்கு பின் மற்றவர்களை விமர்சனம் செய்வது பாமகவின் வாடிக்கையாக உள்ளது என சமீபத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுகவை விமர்சித்து கருத்து தெரிவித்ததால் கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் தன்னை நீக்கியது தொடர்பாக பெங்களூர் புகழேந்தி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் வரும் 27-ம் தேதிதான் பட்டியலிடப்படும் என நீதிபதி நிர்மல்குமார் கூறியுள்ளார்.