தென்னாப்பிரிக்காவில் வந்த இருவருக்கு கொரோனா : அலார்ட்டான கர்நாடகா
தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கர்நாடகா மாநில அரசு தனது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட புதிய உருமாறிய வைரஸ் வகை ஒமைக்ரான் (B.1.1.529- Beta) தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரபாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த, புதிய டெல்டா வைரஸ் வகைகள் அதிகம் பரவக் கூடியதாகவும், நுரையீரலை பாதிக்கக் கூடியதாகவும், பிற பொருள் எதிரிகளின் எதிர்வினையை குறைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு இந்தியர்களுக்கு டெல்டா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 'ஒமைக்ரான்' தொற்று இல்லை எனவும் பெங்களூர் ஊரக மாவட்ட துணை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட தகவல் குறிப்பில், " ‘அதிக பாதிப்பு‘ அபாயமுள்ள நாடுகளிலிருந்து 5வந்த 84 சர்வதேச பயணிகளிடம் விமான நிலையத்தில் சோதனை நடைபெற்றது.
இதில், தென்னாப்பிரிக்காவில் வந்த இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளை, மரபணு வகைப்படுத்தலுக்கு உட்படுத்தியதில், டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது.