ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி - ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்?

Royal Challengers Bangalore Cricket Bengaluru Sports IPL 2024
By Jiyath Mar 12, 2024 07:02 AM GMT
Report

பெங்களூரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் தொடர் 

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதனிடையே ஐபிஎல் தொடரின் பகுதி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி - ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்? | Bangalore Ipl Matches Shifted To Another Stadium

மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்புக்கு பிறகு முழு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முதல் 21 போட்டிக்கான அட்டவணையில் 3 போட்டிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது.

 இந்த தொடரின் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டி20 ஃபைனலில்16 ரன்னுக்கு ஆல்-அவுட் - மோசமான சாதனையை படைத்த அணி!

டி20 ஃபைனலில்16 ரன்னுக்கு ஆல்-அவுட் - மோசமான சாதனையை படைத்த அணி!

வேறு இடத்திற்கு மாற்றமா?

அடுத்து நடக்கவிருக்கும் பஞ்சாப், கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி - ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்? | Bangalore Ipl Matches Shifted To Another Stadium

இந்நிலையில் பெங்களூரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இருப்பினும் தண்ணீர் பிரச்னையால் போட்டிகள் தடைபடாது என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்றுவரும் பெரும்பாலான போட்டிகள் பெங்களூர் ஸ்டேடியத்தில் தான் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.