பெங்களூரில் விடிய விடிய பெய்யும் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - வைரல் வீடியோ

India
By Nandhini Sep 05, 2022 05:56 AM GMT
Report

பெங்களூரில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பெங்களூரில் கனமழை

பெங்களூரில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கனமழை காரணமாக, கடந்த 30ம் தேதி போக்குவரத்து நெரிசலால் ஒரே நாளில் ரூ.225 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அம்மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளன.

பெங்களூரில் வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை இடியுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், பெங்களூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.