கண்ணில் மிளகாய் பொடி தூவி பெற்ற குழந்தையை கொலை செய்து காட்டுக்குள் வீசிய கொடூர தாய்- துளசியை தொடர்ந்து நதியா!
பெங்களூரு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி சடலத்தை மலையடிவாரத்தில் தூக்கி வீசிய தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பிடிஎம் லே அவுட் பகுதியில் வசித்து வரும் நதியா, ரவி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்த மூன்று மாதத்திலேயே, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் தன் குழந்தையோடு தனியாக வசித்து வந்த நதியாவுக்கு சுனில்குமார் என்பவருக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களின் உல்லாசத்திற்கு அவரது குழந்தை இடையூறாக இருப்பதால் அவ்வப்போது குழந்தையை பிரம்பால் அடித்தும், கண்ணில் மிளகாய் பொடி தூவியும் கொடுமைப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் தான் கள்ளக்காதலால் துளசி என்ற பெண் தன் 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அனைவரையும் முகம் சுளிக்க செய்தது. அந்த சம்பவமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த கொடுமை எல்லை மீற, குழந்தை இடையூறாக இருந்து கொண்டே தான் இருக்கும், என எண்ணி ஒரே அடியாக தீர்த்துக்கட்டி விடலாம் என திட்டம் தீட்டியிருக்கிறார் நதியா.
அதன் படி, சுனில்குமாரும், நதியாவும் ஒன்றாக இணைந்து அந்த குழந்தையை பிரம்பால் அடித்தும், சூடுவைத்தும் சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பின்பு அந்த சடலத்தை காரில் எடுத்துகொண்டு மலையடிவாரத்தில் வீசி சென்று வந்துள்ளனர். மலையடிவாரத்தில் இருந்த சிறுவனின் சடலத்தை மீட்ட போலீசார், நதியா தான் கொலை செய்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து நதியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கள்ளக்காதலுக்காக இடையூறாக இருந்ததால் கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.