லக்னோ அணியை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது பெங்களூர் அணி..!

Lucknow Super Giants Royal Challengers Bangalore IPL 2022
By Thahir May 25, 2022 07:28 PM GMT
Report

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களில் இருந்த லக்னோ மற்றும் பெங்களூர் அணி இடையேயான எலிமினேட்டர் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

லக்னோ அணியை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது பெங்களூர் அணி..! | Bangalore Beat Lucknow By A Huge Margin

இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.பெங்களூர் அணியில் ராஜட் பட்டித்தர் 112 ரன்களும் தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் எடுத்தனர்.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் டி காக் 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இதன்பின் வந்த மனன் வோஹ்ரா 19 ரன்னிலும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா 26 பந்துகளில் 45 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

லக்னோ அணியை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது பெங்களூர் அணி..! | Bangalore Beat Lucknow By A Huge Margin

இந்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 19 வது ஓவரில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்த லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

லக்னோ அணியை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது பெங்களூர் அணி..! | Bangalore Beat Lucknow By A Huge Margin

லக்னோ அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி, இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறி, வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ள உள்ளது.