3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி..!

RCB IPL2022 Wining RCBVsKKR KKRVsRCB
By Thahir Mar 30, 2022 07:35 PM GMT
Report

ஐபிஎல் கிரிகெட் தொடரின் 6-வது லீக் ஆட்டம்,மும்பை டி.ஓய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியும்,பெங்களூர் அணியும் மோதின.டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா அணியின் ஆட்ட்ரூ ரசல் 25 ரன்னும்,உமேஷ் யாதவ் 18 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா டி சில்வா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்கத்தில் பெங்களூரு அணியும் தடுமாறியது.

கேப்டன் டூ பிளசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அனுஜ் ராவத் டக் அவுட்டானார். விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார். டேவிட் வில்லி 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூதர்போர்டு, ஷாபாஸ் அகமது பொறுப்புடன் விளையாடினர். ரூதர்போர்டு 28 ரன்னிலும், ஷாபாஸ் அகமது 27 ரன்னிலும் அவுட்டானார்.

இறுதியில், பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து, முதல் வெற்றியைப் பதிவு செய்தது.