அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் - டெல்லியை வீழ்த்திய பெங்களூரு அணி
டெல்லி அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 40 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பிறகு மேக்ஸ்வெல் - தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.
குல்தீப் யாதவ் ஓவரில் 2 சிக்ஸர் ,2 பவுண்டரிகளை மேக்ஸ்வெல் பறக்கவிட, முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரில் 4 பவுண்டரி ,2 சிக்ஸர்களை பறக்க விட்டு தினேஷ் கார்த்திக் கெத்து காட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 66 ரன்களும், மேக்ஸ்வெல் 55 ரன்களும் குவித்தனர்.
இதனை தொடர்ந்து 190 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. அந்த அணியில் டேவிட் வார்னர் 66, ரிஷப் பண்ட் 34 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.