ஆக்சிஜன் ஆலையில் பயங்கர வெடி விபத்து - 6 பேர் பலி, பலர் காயம்... - அதிர்ச்சி சம்பவம்..!

Bangladesh Fire Accident
By Nandhini Mar 05, 2023 12:52 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பங்களாதேசத்தில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடி விபத்தில் 6 பேர் பலி

பங்களாதேஷ், தென்கிழக்கு துறைமுக நகரமான சிட்டகாங், சிதகுண்டாவில் உள்ள ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தால், தீ மளமளவென கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் மீட்புப் பணியை மேற்கொண்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த வெடிவிபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். சிதகுண்டாவில் உள்ள ஆலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.   

bangaladesh-fire-accident-viral-video