இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு என் தடை விதிக்கக்கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்கக் கோரிய பொதுநல வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் கட்சியினரின் தேர்தல் அறிக்கைகளில் இலவச திட்டங்களே பிரதான இடத்தை பிடிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலே வாக்குறுதிகள் அமையவேண்டும் என்றும், கடந்த 4 சட்டமன்ற மற்றும் நாடளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற கட்சிகள் தங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதுமட்டுமின்றி இலவச திட்டங்களை அறிவிப்பதால் மாநிலத்தின் நிதிச்சுமை அதிகரித்து அது கடைசியில் மக்கள் தலையில் தான் வந்து விடிகிறது.
மேலும் சரக்கு மற்றும் பிரியாணிக்காக ஆசைப்படும் மக்கள் எப்படி தங்களுக்கு ஒரு நல்ல தலைவனை எதிர்பார்க்க முடியும்? என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர்.
இந்த கேள்விகள் அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வருகிற ஏப்ரல் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.