சோஷியல் மீடியாவை பயன்படுத்த தடை - இலங்கை அரசு அதிரடி

Sri Lanka
By Thahir Sep 29, 2022 11:01 AM GMT
Report

அரசு ஊழியர்கள் சோஷியல் மீடியாக்களில் கருத்து பதிவிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.

பொருளாதார நெருக்கடி போராட்டம் 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதனால் அந்நாட்டில் மக்கள் புரட்சி வெடித்து பல்வேறு இடங்களிலும் போராட்டம் வெடித்தது.

போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியதை அடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

சோஷியல் மீடியாவை பயன்படுத்த தடை - இலங்கை அரசு அதிரடி | Ban On Use Of Social Media Sri Lanka

இதையடுத்து முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.

இதனால் போராட்டம் சற்று ஓய்ந்தது. மீண்டும் அங்கு போராட்டத்தை மாணவர் அமைப்பினர் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு அதிரடி உத்தரவு 

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அரசு ஊழியர்கள் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கம் அடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

சோஷியல் மீடியாவை பயன்படுத்த தடை - இலங்கை அரசு அதிரடி | Ban On Use Of Social Media Sri Lanka

இதையடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த இலங்கை அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று இலங்கை அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.