காதலர்கள் அதிர்ச்சி..! ரோஜா பூக்களுக்கு தடை - அரசு அதிரடி அறிவிப்பு
காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து புதிய ரோஜாக்களை இறக்குமதி செய்ய நேபாளம் தடைவிதித்துள்ளது.
தடை விதித்த அரசு
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆண்டு தோறும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களின் அன்பை ரோஜா பூக்கள் கொடுத்து வெளிப்படுத்துவர்.
இதற்காக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து புதிய ரோஜாக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது.

நேபாள தாவர தனிமைப்படுத்தல் மற்றும் பூச்சிக்கொல்லி மேலாண்மை மையம், ரோஜா பூக்களுக்கு தாவர நோய் அபாயத்தை காரணம் காட்டி இறக்குமதி அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா மற்றும் சீனா எல்லையில் உள்ள 15 சுங்க அலுவலகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நோய் ஏற்படும் அபாயம்
இந்த மையத்தின் தகவல் அதிகாரி மகேஷ் சந்திர ஆச்சார்யா கூறுகையில், காய்கறி பொருட்களில் நோய்கள் மற்றும் பூச்சிகள் வர வாய்ப்புள்ளதால் இறக்குமதி உடனடியாக நிறுத்தப்பட்டது.
மேலும்,“ரோஜாக்கள் மற்றும் பிற தாவரங்களில் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற நோய்கள் குறித்து முறையான ஆய்வு இல்லாததால், இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது,” என்றார்.
சுங்கத் துறையின் விவரங்களின்படி, நேபாளம் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.3 மில்லியன் (10 கோடி) மதிப்புள்ள 10,612 கிலோ ரோஜாப் பூக்களை இறக்குமதி செய்துள்ளது.
தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு இப்போது சந்தையில் ரோஜாக்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தும். காதலர் தினத்தை ஒட்டி நேபாளத்தில் கிட்டத்தட்ட 300,000 ரோஜாப் பூக்கள் விற்கப்படுகின்றன. நேபாளத்தில் சுமார் 20,000 ரோஜா பூக்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக ஆச்சார்யா கூறினார்.