தமிழகத்தில் உள்ள உணவகங்களில் புகைக்குழல் கூடம் (Smoking Room) திறக்க தடை - தமிழக அரசு அதிரடி

Government of Tamil Nadu
By Thahir Aug 04, 2023 06:12 AM GMT
Report

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு ( Smoking Room ) தடை விதித்து தமிழக அரசு அரசிதழில் வெளியீடு செய்துள்ளது.

தமிழக அரசு தடை 

அதன்படி, தமிழகத்தில் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகைக்குழல் கூடம் எங்கும் திறக்கக்கூடாது என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ban on opening smoke Room in restaurants

அரசின் விதிமுறைகளை மீறியிருந்தால் புகைக்குழல் கூடத்தில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.

மீறினால் அபராதம் 

மேலும், விதிகளை மீறி புகைக்குழல் கூடம் திறந்தால் ஓராண்டு முதல் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவுக்கூடங்கள் உட்பட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.