ஆன்லைன் ரம்மிக்கு தடை; அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடை சட்டத்திற்கு ஒப்புதல்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் நாளுக்கு நாள் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது.
நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சந்தோஷ் என்ற பொறியியல் கல்லுாரி மாணவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 1-ம் தேதியே அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அக்டோபர் 17-ஆம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை தொடரில் நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.