திருமலை நாயக்கர் மஹாலில் திரைப்படம் மற்றும் போட்டோஷுட் நடத்த தடை - உச்சநீதிமன்றம் !
திருமலை நாயக்கர் மஹாலில் போட்டோஷுட் மற்றும் குறும்படங்கள் எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தென்தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றலாத்தங்களில் ஒன்றானது திருமலை நாயக்கர் மஹால். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த மஹாலில் பம்பாய் , இருவர் , குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களின் முக்கிய காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2011 ஆம் ஆண்டு, திருமலை நாயக்கர் மஹாலின் சுவர்கள் மற்றும் தூண்கள் சேதமடைவதாக தொல்லியல்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
அதன்படி குறும்படங்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்கள் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் திருமலை நாயக்கர் மஹாலில் அனுமதியின்றி சட்டவிரோதமாக அவ்வப்போது திருமண போட்டோஷூட்டுகள், குறும்படங்கள் எடுக்கப்பட்டு வந்தது .
மேலும் சமீபத்தில் எடுக்கப்பட குறும்படம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய படி ஒரு நபர் வளம் வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இதையடுத்து இந்த வீடியோ காட்சிகள் தற்போது தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனால் சட்டத்திற்கு புறம்பாக எந்த வித போட்டோஷூட் மற்றும் குறும்படங்களும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.