திமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட் , பேனர் வைக்க தடை - ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு

Tamil nadu DMK
By Thahir Mar 16, 2023 09:47 AM GMT
Report

திமுக தலைவர், நிர்வாகிகள் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சிக்கும் பேனர், கட்டவுட் வைக்க கூடாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

பேனர் வைக்க தடை 

திமுக நிகழ்வுகளில் கட்டவுட் வைக்க கூடாது. பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் தற்போது ஒரு சிலர் பேனர் வைப்பதாக தகவல் வந்துள்ளது.

நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதியோடு பாதுகாப்பாக வைக்கலாம்.

Ban on cut out, banner - RSBharti

சாலை மற்றும் தெரு நெடுகிலும் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அறிவுரையை மீறி யாரேனும் பேனர் கட்டவுட் பிளக்ஸ் வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.