இந்த நகரத்தில் ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்படுத்த தடை; அவர்களே எடுத்த முடிவு - எங்கு தெரியுமா?
கிரேஸ்டோன்ஸ் என்ற நகரில் குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்ஃபோன்கள்
தற்போது ஸ்மார்ட்ஃபோன்கள் என்பது மனிதர்களின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாமல் தூங்குவதும், சாப்பிடுவதும் இல்லை.
குழந்தைகளை அழாமல் இருப்பதற்கும், உணவை ஊட்டுவதற்கும் பெற்றோர்களே குழந்தைகளிடம் ஃபோன்களை கொடுக்கின்றனர். தற்போது உள்ள சிறுவர்களும் விளையாடுவதற்கு வீட்டை விட்டே வெளியில் செல்வதில்லை. வீட்டில் அமர்ந்து ஸ்மார்ட்போன்களில் உள்ள கேம்ஸ்களை தான் விளையாடுகிறார்கள்.
2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகத்தில் 10 வயது வரையுள்ள குழந்தைகளில் ஐந்தில் 2 பங்கினர் ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ளனர். 12 வயதுகளில் 71%, 14 வயது வரையுள்ள குழந்தைகளில் 91% பேர் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கின்றனர்.
பெற்றோர்கள் முடிவு
இந்நிலையில் அயர்லாந்து நாட்டில் உள்ள கிரேஸ்டோன்ஸ் என்ற நகரில் குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை அவர்களுக்கு ஸ்மார்டஃபோன்களை கொடுக்க வேண்டாம் என்று பெற்றோர்களே முடிவு செய்துள்ளனர்.
இந்த நகரத்தில் உள்ள 8 தொடக்கப்பள்ளிகள் முதலில், மாணவர்கள் மின்னணு சாதனங்களைக் கொண்டுவருவதற்கு தடை விதித்தன. பின்னர் பள்ளியின் பெற்றோர் சங்கங்கள் தாமாக முன்வந்து குழந்தைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன்களை கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.
தற்போது நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்கித் தர வேண்டாம் என்று ஒருமித்தமாக முடிவு செய்துள்ளனர்.