இந்த 12 நாட்டினர் அமெரிக்கா செல்ல தடை - டிரம்ப் அதிரடி அறிவிப்பு
12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
கொலராடோவில் இஸ்ரேலுக்கு ஆதரவான குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவர்களுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் உத்தரவு
மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவு வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Viral Video: படமெடுத்து நின்ற பாம்பிற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... பின்பு நடந்த டுவிஸ்ட் Manithan

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
