மீண்டும் ஒரு மாதம் இந்திய விமானங்களுக்கு தடை ..கனடாஅறிவிப்பு!

india ban canada flights
By Irumporai Jul 20, 2021 09:56 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கனடாவில், ஜூலை 21-ம் தேதி வரை இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 21 வரை தடையினை நீடித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா  வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ஒவ்வொரு நாடுகளிலும் விமான போக்குவரத்துக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கனடாவில், உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, ஜூலை 21-ம் தேதி வரை இந்திய விமானங்களுக்கான தடை அமலில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 21 வரை தடையை நீட்டித்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.