பல் பிடுங்கிய விவகாரம் :பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
பல்பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது மேலும் 4வது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பல் பிடுங்கிய விவகாரம்
திருநெல்வேலி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் , அம்பாசமுத்திரம் பகுதி சுற்றுவட்டாரா பகுதியில் விசாரணைக்கு அழைத்து வந்தவர்கள் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த்தாக அவர் மீது தொடர் புகார்கள் எழுந்தன.
கூடுதல் வழக்கு
இதனை தொடர்ந்து அவர் மீது அமுதா ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே 3 எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.
தற்போது, ஜாமீன் சிங்கபட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் அதிகாரிகள் ராஜகுமாரி, ராமலிங்கம், ஜோசப் ஆகியோர்மீதும் , பல்வீர்சிங் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வீர்சிங் மீது பதியப்பட்ட வழக்குகள் 4ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.