பல்வீர் சிங் வழக்கு : டிஜிபி பதிலளிக்க, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Crime
By Irumporai Apr 28, 2023 11:31 AM GMT
Report

பல்வீர் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி விளக்கமளிக்க, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 பற்கள்பிடுங்கிய விவகாரம்

அம்பாசமுத்திரம் காவல்நிலைய கைதிகளின் பற்களை பிடுங்கிய, முன்னாள் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி விளக்கமளிக்க டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது, அவர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்வீர் சிங் வழக்கு : டிஜிபி பதிலளிக்க, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | Balveer Singh Case Human Rights Commission Notice

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம், காவல்நிலையத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என 4 வாரத்தில் விளக்கம் அளிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது, மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தால் அதையும் 4 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.