பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் - இந்தியாவின் ஆதரவை நாடிய பிரதமர்!

BJP Narendra Modi Pakistan
By Vinothini Jul 30, 2023 06:10 AM GMT
Report

 விடுதலை பெறுவதற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்று பலுசிஸ்தானின் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தான்

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பினர் மற்றும் மக்கள் தனி நாடு வேண்டும் என்று கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

balochistan-pm-seeks-indias-support

இந்த சமையத்தில் பலுசிஸ்தான் அரசின் முதல்-மந்திரியும், மூத்த பெண் அரசியல்வாதியுமான நெய்லா குவாட்ரி பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக பல நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அதனால் தற்பொழுது இந்திய வந்துள்ளார்.

ஆதரவு தேவை

இந்நிலையில், இந்தியாவிற்கு வந்த அவர் நேற்று முன்தினம் உத்தரகாண்டின் ஹரித்வார் நகரில் கங்கை நதிக்கரையில் பலுசிஸ்தானின் விடுதலைக்காக சிறப்பு பூஜை செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஐ.நா.வில் பலுசிஸ்தானுக்கு ஆதரவாக எழுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும் பா.ஜ.க.

balochistan-pm-seeks-indias-support

அரசுக்கும் இன்று ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது நாளை கிடைக்காது. ஐ.நா.வில் பலுசிஸ்தானுக்காக இந்தியா நின்றால், எங்கள் நாடு சுதந்திரமாக இருக்கும்போது நாங்களும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம்" என்று கூறியுள்ளார்.