நோ வழுக்கை தலை .. புல் ஷேவ் செய்யனும் : ஏர் இந்தியாவின் புது கண்டிஷன் : களக்கத்தில் ஊழியர்கள்

By Irumporai 2 மாதங்கள் முன்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானங்களில் பணிபுரிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடு

ஏர் இந்தியா வெளியிட்டுள்ள இந்த புதிய உத்தரவுகள் பணியாளர்கள் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக கூறுகின்றனர்.

அதன்படி ஏர் இந்தியாவில் பணியாற்றும் ஆண் ஊழியர்களை பொருத்தவரை, வழுக்கை திட்டு திட்டாக இருந்தால் முழுமையாக தலையில் ஷேவ் செய்து மொட்டையடித்து இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

நோ வழுக்கை தலை .. புல் ஷேவ் செய்யனும் : ஏர் இந்தியாவின் புது கண்டிஷன் : களக்கத்தில் ஊழியர்கள் | Bald New Rules For Air India Cabin Crew

மதக்கயிறு கூடாது

மேலும், தலையில் கண்டிப்பாக ஹேர் ஜெல் தடவியிருக்க வேண்டும். டை அடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இயல்பான கலரில் டை அடிக்க வேண்டும்.

மத வழக்கப்படி அணியப்படும் கயிறுகளை கட்டக்கூடாது என கூறப்பட்டுள்ளது. அதேபோல், பெண் பணியாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

பெண் பணியாளர்கள், காதில் தங்கம் அல்லது சாதாரண கம்மல்களை அணியலாம். 

பெண்களுக்கு கட்டுப்பாடு

முத்துக் காதணிகளை அணியக்கூடாது. தலைமுடியை பொறுத்தவரை லோபேன் கொண்டை கட்டக்கூடாது. மோதிரம் ஒரு செ.மீட்டர் அகலத்திற்கு மேல் இருக்கூடாது.

மணிக்கட்டு, கழுத்து, கணுக்காலில் மதவழக்கப்படியிலான கயிறுகள் கட்டக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.