வழுக்கைத் தலையை மறைத்து கல்யாணம்; ஆத்திரத்தில் மனைவி - கணவம் வெறிச்செயல்!
இளைஞர் ஒருவர் தனது வழுக்கை தலையை மறைத்து விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
ஏமாற்றிய கணவன்
சென்னை, அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 8 மாதங்களுக்கு முன் லோகப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், உடலை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர். அதனையடுத்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கையில், கோகுல கண்ணன் திருமணத்திற்கு பெற்றோர் தீவிரமாக பெண் பார்த்து வந்துள்ளனர். அவருக்கு வழுக்கை என்பதால் பெண் கிடைக்காமல் இருந்துள்ளது.
தற்கொலை?
இதனால் அவர் விக் வைத்துக்கொண்டு லோகப்பிரியா மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் இதனை அறிந்த மனைவி இதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில் நகைகள் குறைவாக போட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதில், வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் மனைவியை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் பதறி கணவன் அவரது தாயிடம் கூறியதில் இருவரும் சேர்ந்து மனைவியை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனையில் இது தற்கொலை அல்ல கொலை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதனபி்ன் கணவன்,மாமியார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.