எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது!
எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகின்றன.
இதேபோல் சிறந்த படைப்புகளுக்கு யுவ புரஸ்கார், சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் என சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
அந்தவகையில் 2020 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருது எழுத்தாளர் எஸ்.பால பாரதியின் 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுடன் அவருக்கு 50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை அவர் பெற உள்ளார். இதேபோல் துலக்கம், அன்பான பெற்றோரே, சந்துருக்கு என்னாச்சு, புதையல் டைரி, பூமிக்கு அடியில் ஒரு மர்மம் முதலிய நூல்களை யெஸ். பலபாரதி எழுதியுள்ளார்.
இதனிடையே குழந்தை தன்னை சுற்றி நடக்கும் பாலியல் அத்துமீறல்களை கண்டு பயப்படாமல் அதை வெளியில் உடனே கத்தி சொல்ல வேண்டும் என்பதை மரப்பாச்சி பொம்மை சொல்லிக்கொடுக்கும். பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்வதுடன், வெளியில் சொல்லி அவர்களை தண்டிக்க வைக்க முடியும் என்பதை மரப்பாச்சி பொம்மை நூலில் கூறியுள்ளதாகவும், இந்த நூலுக்கு விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் பாலபாரதி தெரிவித்துள்ளார்.