திடீர் மூச்சுத்திணறல் - பிரபல அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி
மூச்சுத்திணறல் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு (வயது 65) நேற்று இரவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை குறித்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே, எதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பது குறித்துத் தெரிய வரும். மேலும், மருத்துவ பரிசோதனை முடிவுகளை வைத்தே அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது தெரியவரும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.