ராதிகாவை மேடையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நடிகர் - கோபத்தில் சரத்குமார் செய்த செயல்!

Sarathkumar Raadhika Viral Video
By Sumathi Mar 26, 2024 08:12 AM GMT
Report

நடிகர் பாலகிருஷ்ணா மேடையில் ராதிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

ராதிகா சரத்குமார்

நடிகை ராதிகா சரத்குமாருக்கு அறிமுகமே தேவை இல்லை. சின்னத்திரை வெள்ளித்திரை என்று கொடிகட்டி பறந்தவர். அரசியலில் பல வருடங்களாக இருந்தாலும் தற்போது வரும் லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

raadhika with balakrishna

சரத்குமாரும் நடிகராக மட்டுமல்லாமல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்துக் கொண்டார்.

அரசியல்வாதி நீங்க.. நான் இல்ல; அதைப் பத்தி பேசாதீங்க - சரத்குமாரிடம் கொந்தளித்த ராதிகா!

அரசியல்வாதி நீங்க.. நான் இல்ல; அதைப் பத்தி பேசாதீங்க - சரத்குமாரிடம் கொந்தளித்த ராதிகா!

சரத்குமார் ரியாக்‌ஷன்

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான விருது விழா ஒன்றில் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் கலந்து கொண்டனர். இதில் சரத்குமாரும் ராதிகாவும் இணைந்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு விருது வழங்கினர்.

sarathkumar with balakrishna

அப்போது மேடைக்கு வந்த பாலகிருஷ்ணா முதலில் சரத்குமாருக்கு கை கொடுத்துவிட்டு நடிகை ராதிகாவை கட்டிப்பிடித்து ஃபார்மலாக முத்தம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணாவிற்கு சரத்குமார் மைக்கை தர மறுத்திருக்கிறார்.

அதோடு ராதிகாவை மட்டும் கட்டிப்பிடித்து விட்டு என்னை கட்டி பிடிக்கவில்லை என்று கலாய்த்துள்ளார். அதற்கு பாலகிருஷ்ணா சிரித்தப்படியே மன்னிப்பு கேட்டு சரத் குமாரையும் கட்டிப்பிடித்து இருந்தார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.