இளையராஜாவை வம்புக்கு இழுத்த பாலகிருஷ்ணா... கொதித்தெழுந்த ரசிகர்கள்
Ilayaraja
Actor balakrishna
By Petchi Avudaiappan
இசைஞானி இளையராஜாவின் பாடலுக்கு நான் திறமையாக வாயசைத்திருக்கிறேன் என தற்பெருமை பேசிய நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தெரியாது என்று தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் பாலகிருஷ்ணாவை ட்விட்டரில் 'யார் அந்த பாலகிருஷ்ணா?' என்ற ஹேஷ்டேக் மூலம் கடுமையாக விமர்சித்தனர்.

அந்த நேர்காணலில் இசைஞானி இளையராஜாவையும் புகழ்வது போல் தற்பெருமை பேசி அவரது இவர்களின் எதிர்ப்புக்கு தற்போது பாலகிருஷ்ணா ஆளாகியுள்ளார்.