என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க வந்தா தாங்க மாட்டீங்க : முதலமைச்சரை சீண்டும் பாலாஜி முருகதாஸ் ?

M. K. Stalin DMK
By Irumporai Mar 26, 2023 01:34 PM GMT
Report

ஆன்லைன் ரம்மியை விட மிக மோசமானது டாஸ்மாக் என்றும் எனவே டாஸ்மாக் கடைகளை முதலில் மூடுங்கள் என்றும் பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனலைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி காரணமாக 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில் இது குறித்த மசோதா சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க வந்தா தாங்க மாட்டீங்க : முதலமைச்சரை சீண்டும் பாலாஜி முருகதாஸ் ? | Balaji Murugadoss Says To Close Tasmac Cm Stalin

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியை விட குடி நிறைய குடும்பங்களை அழிக்கிறது என்றும் எனவே முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்றும் பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலாஜி முருகதாஸ்

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் குடியால் ஆதரவற்று நிற்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் என்றும் இந்த கருத்தை கூறியதால் என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள் என்றும் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது