கடந்த 72 ஆண்டுகளில் பதிவான 3-வது அதிகபட்ச மழையளவு இதுதான்... - இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி
கடந்த 72 ஆண்டுகளில் பதிவான 3-வது அதிகபட்ச மழையளவு இதுதான் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி
இந்நிலையில், மழை தொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அந்தப் பேட்டியில் பேசுகையில், தென் மேற்கு வங்கப் பகுதியில், இலங்கையையொட்டி, வளிமண்டலத்தின் கீழ் சுழற்சி நிலவுகிறது.
கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் தமிழகத்தில் சந்திக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த 72 ஆண்டுகளில் பதிவான மூன்றாவது அதிகபட்ச மழையளவு இதுவாகும் என்றார்.