14 நாட்கள் நிர்வாணமாக இருந்தேன்... - எனக்கு மண்டையே வெடித்துவிட்டது.. மனம் திறந்த ஜிஎம் குமார்...!

Tamil Cinema Bala
By Nandhini Jan 19, 2023 01:20 AM GMT
Report

14 நாட்கள் நிர்வாணமாக இருந்தேன்.எனக்கு மண்டையே வெடித்துவிட்டது என்று பிரபல நடிகர் ஜிஎம் குமார் மனம் திறந்து பேசியுள்ளார்.

இயக்குநர் பாலா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பங்கு இயக்குநர் பாலாவிற்கு உண்டு. சமீபத்தில் இயக்குநர் பாலா தன் மனைவி முத்துமலரை விவாகரத்து செய்த சம்பவம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியாக்கியது. கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்

பாலாவின் ‘அவன் இவன்’ படம்

கடந்த 2011ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த படம் ‘அவன் இவன்’. இப்படத்தில் ஜமீன் பரப்பரையை சேர்ந்தவராக ஜிஎம் குமார் நடித்திருந்தார். இப்படத்தில் க்ளைமேக்ஸ காட்சியில் ஜி.எம்.குமார் நிர்வாணமாக ஓடுவது போல நடித்திருந்தார்.

அதேபோல் மரத்தில் நிர்வாணமாக நிர்வாணமாக கட்டி தொங்குவது போல் நடித்திருந்தார். இக்காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

bala-film-director-actor-g-m-kumar

14 நாட்கள் நிர்வாணமாக இருந்தேன்

இந்நிலையில் இப்படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து நடிகரும், இயக்குநருமான ஜிஎம் குமார் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில் -

படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தபோது, திடீரென என் அருகில் வந்த பாலா, க்ளைமேக்ஸை மாற்றிவிட்டேன், நீங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கூறினார். அவர் சொல்லிவிட்டு போன பிறகு எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்குள் அந்த காட்சி குறித்து பயம் இருந்துக்கொண்டே இருந்தது.

நிர்வாண காட்சிகள் மொத்தம் 14 நாட்கள் எடுக்கப்பட்டது. அதில், 7 நாட்கள் நிர்வாணமாக நடித்தேன். எஞ்சிய 7 நாட்கள் நிர்வாணமாக மரத்தில் தொங்கவிடப்பட்டேன்.

மாடுகளுக்கு இடையில் மழையில் ஓடுவது, வில்லன் என்னை அடிப்பது என அந்த காட்சி படமாக்கப்படுவதற்குள் நான் ஒருவழியாகிவிட்டேன். 80 அடி உயர மரத்தில் உண்மையாகவே நிர்வாணமாக கட்டி தொங்கவிடப்பட்டேன் என்று தன் வேதனையை பகிர்ந்தார்.