Wednesday, Apr 16, 2025

பக்ரீத் பண்டிகைக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாங்கிய ஆடு திருட்டு..!

Pakistan
By Thahir 3 years ago
Report

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாங்கி ஆடு திருடு போனது.

பக்ரீத் பண்டிகை

தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருடம் பக்ரீத் பண்டிகை அரபு நாடுகளில் 9-ம் தேதி கொண்டாடப்பட்டது.தமிழகத்தில் இன்று கொண்டாடப்பட உள்ளது.

ஆடு திருட்டு

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் இவர் லாகூர் பகுதியில் வசித்து வருகிறார். ஆறு ஆடுகளை கம்ரான் அக்மல் வீட்டினர் வாங்கியுள்ளனர்.

பக்ரீத் பண்டிகைக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாங்கிய ஆடு திருட்டு..! | Bakrid Function Ex Cricketer Goat Theft

இந்த ஆடுகளை வீட்டின் வெளியே தொழுவத்தில் வைத்து அதை பாதுகாத்து பராமரிக்க ஒரு உதவியாளரையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அவரது வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கி வைத்த விலை உயர்ந்த ஆடு ஒன்றை திருடர்கள் திருடிச் சென்றுவிட்டதாக கம்ரான் அக்மலின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. அங்கிருந்து ஆறு ஆடுகளில் ரூ.90,000 மதிப்புள்ள விலை உயர்ந்த ஆட்டை திருடர்கள் தூக்கி சென்று விட்டதாக கம்ரான் அக்மலின் தந்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.